
25.01.2025 அன்று குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் ஜாண்ஸ சென்ட்ரல் பள்ளியில் ஜாண்ஸ் அறக்கட்டளை மற்றும் குமரி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
25.01.2025 அன்று குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் ஜாண்ஸ சென்ட்ரல் பள்ளியில் ஜாண்ஸ் அறக்கட்டளை மற்றும் குமரி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை காரக்கோணம் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிட்சை நிபுணர் சந்தீப் குமார் தொடங்கிவைத்தார். பள்ளி தாளாளர் ஜெபில் வில்சன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். தக்கலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் கோலப்பன் ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வராஜன் இணைந்து முகாமை ஒருங்கிணைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஷெரின் சந்திர லீலா மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கத்திஉறுப்பினர்கள் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

02/09/2024 அன்று இலவச இரத்த தானம் 6500 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது
02-09-2024 குமரி அறக்கட்டளையின் அலுவலக பதிவேட்டின்படி 6500 யூனிட் இரத்தத்தை இலவசமாக தானம் செய்து குமரி மாவட்ட அளவில் சாதனைப்படைத்துள்ளது. என்பதனை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அனைத்து இரத்த தான நன்கொடையாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

24/05/2024அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன் குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில் மாவட்ட அளவிலான இலவச மருத்துவ முகாம் ஸ்மார்ட் மருத்துவமனை மற்றும் சுரேஷ் கண் மருத்துவமனை மற்றும் மெர்லின் பல் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்டது.
24/05/2024 அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன் குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில்
மாவட்ட அளவிலான இலவச மருத்துவ முகாம் ஸ்மார்ட் மருத்துவமனை மற்றும் சுரேஷ் கண் மருத்துவமனை மற்றும் மெர்லின் பல் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்டது.

24/05/2024அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன், குலசேகர த்தில் வைத்து இரத்த தான நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
24/05/2024 அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன், குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில்
300 இரத்த தான நன்கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி நினைவு பரிசு வழங்கி சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டது

15/05/2024 அன்று இலவச இரத்த தானம் 6000 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது
15/05/2024 இன்று குமரி அறக்கட்டளைஅலுவலக பதிவேட்டின் படி 6000யூனிட் இலவச இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் இரத்த தான நன்கொடையாளர்கள் மற்றும் குமரி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்து நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

03/02/2024 அன்று இலவச இரத்த தானம் 5500 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது
03/02/2024 இன்று குமரி அறக்கட்டளைஅலுவலக பதிவேட்டின் படி 5500 யூனிட் இலவச இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் இரத்த தான நன்கொடையாளர்கள் மற்றும் குமரி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்து நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

07/01/2024 அன்று இரத்த தானம் விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நடத்தப்பட்டது
07/01/2024 அன்று கருங்கல் சந்தை மைதானத்தில் வைத்து மாரத்தானில் கலந்து கொண்ட வர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது மற்றும் இரண்டு ஏழை எளிய கல்லூரி படிக்கும் மாணவ மாணவிக்கு படிப்பு உதவித்தொகை ₹20000+20000 வீதம் வழங்கப்பட்டது அதுமட்டுமின்றி ஒரு நபருக்கு வீல் செயர் வழங்கப்பட்டது மேலும் 500 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

19/09/2023 அன்று 5000 யூனிட் இரத்தத்தை குமரி அறக்கட்டளை தானமாக செய்து
19/09/2023 இன்றோடு குமரி அறக்கட்டளையின் அலுவலக பதிவேட்டின் படி இலவச இரத்த தானம் 5000 யூனிட் வழங்கி குமரி மண்ணில் மிக பெரிய சகாப்தம் செய்துள்ளது இரத்த தான நன்கொடையாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் குமரி அறக்கட்டளை சார்பாக இருகரம் கூப்பி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் மேலும் இரத்தத்திற்கு மட்டுமே ஜாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடோ பிரிவினையோ கிடையாது ஒற்றுமையாய் வாழ்வோம்! உயிர்களை காப்போம்

குமரி அறக்கட்டளையின் 4 வது ஆண்டு நிறைவு விழா 5 வது ஆண்டு துவக்கவிழா 28/05/2023 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இயன்றதை செய்வோம் இயலாதவர்கே
குமரி அறக்கட்டளையின் 4-வது ஆண்டு நிறைவு விழாவும் 5-வது ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு 28/05/2023 ( ஞாயிற்றுகிழமை) அன்று மாலை 3 மணி அளவில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் வைத்து 110-ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு பள்ளிச்சீருடை, Bag ,நோட்புக் ,எழுதுபொருட்கள் மற்றும் குடை வழங்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து 110-ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரிசி, சேலை வழங்கப்பட்டது. .மற்றும் சமூக சேவை செய்துகொண்டிருக்கின்ற அறக்கட்டளைகள் மற்றும் நற்பணி மன்றங்களை பாராட்டி விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது