குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

On 25 - 01 - 2025, a blood donation camp was held at Anjugramam John's Central School in Kumari district on behalf of John's Foundation and Kumari Arakkattalai

25.01.2025 அன்று குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் ஜாண்ஸ சென்ட்ரல் பள்ளியில் ஜாண்ஸ் அறக்கட்டளை மற்றும் குமரி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை காரக்கோணம் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிட்சை நிபுணர் சந்தீப் குமார் தொடங்கிவைத்தார். பள்ளி தாளாளர் ஜெபில் வில்சன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். தக்கலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் கோலப்பன் ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வராஜன் இணைந்து முகாமை ஒருங்கிணைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஷெரின் சந்திர லீலா மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கத்திஉறுப்பினர்கள் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
On 31/12/2024 Free Blood Donation 7000 units completed

குமரி அறக்கட்டளையின் அலுவலக பதிவேட்டின்படி 31-12-2024 இன்று வரை 7000 யூனிட் இரத்தத்தை இலவசமாக தானம் செய்து சாதனைப் படைத்துள்ளது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
On 02/09/2024 Free Blood Donotion 6500 units completed

02-09-2024 குமரி அறக்கட்டளையின் அலுவலக பதிவேட்டின்படி 6500 யூனிட் இரத்தத்தை இலவசமாக தானம் செய்து குமரி மாவட்ட அளவில் சாதனைப்படைத்துள்ளது. என்பதனை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அனைத்து இரத்த தான நன்கொடையாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
On 24/05/2024, a function was held at Mamoodu Junction, Kulasekaram, on the occasion of the fifth anniversary and sixth anniversary of Kumari Arakkattalai The district level free medical camp was organized on behalf of Smart Hospital and Suresh Eye Hospital and Merlin Dental Hospital.

24/05/2024 அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன் குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில் மாவட்ட அளவிலான இலவச மருத்துவ முகாம் ஸ்மார்ட் மருத்துவமனை மற்றும் சுரேஷ் கண் மருத்துவமனை மற்றும் மெர்லின் பல் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்டது.
On 24/05/2024 on the occasion of Fifth Anniversary and Sixth Year Inauguration of Kumari Arakkattalai at Mamoodu Junction, Kulasekaram An award ceremony was held for blood donors.

24/05/2024 அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன், குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில் 300 இரத்த தான நன்கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி நினைவு பரிசு வழங்கி சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டது
On 15/05/2024 Free Blood Donotion 6000 units completed

15/05/2024 இன்று குமரி அறக்கட்டளைஅலுவலக பதிவேட்டின் படி 6000யூனிட் இலவச இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் இரத்த தான நன்கொடையாளர்கள் மற்றும் குமரி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்து நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
On 03/02/2024 Free Blood Donotion 5500 units completed

03/02/2024 இன்று குமரி அறக்கட்டளைஅலுவலக பதிவேட்டின் படி 5500 யூனிட் இலவச இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் இரத்த தான நன்கொடையாளர்கள் மற்றும் குமரி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்து நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
Blood Donation Awareness and Anti-Drug Awareness Mini Marathon Conducted on 07/01/2024

07/01/2024 அன்று கருங்கல் சந்தை மைதானத்தில் வைத்து மாரத்தானில் கலந்து கொண்ட வர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது மற்றும் இரண்டு ஏழை எளிய கல்லூரி படிக்கும் மாணவ மாணவிக்கு படிப்பு உதவித்தொகை ₹20000+20000 வீதம் வழங்கப்பட்டது அதுமட்டுமின்றி ஒரு நபருக்கு வீல் செயர் வழங்கப்பட்டது மேலும் 500 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
ON 19/09/2023 FREE BLOOD DONOTION 5000 UNITS COMPLETED

19/09/2023 இன்றோடு குமரி அறக்கட்டளையின் அலுவலக பதிவேட்டின் படி இலவச இரத்த தானம் 5000 யூனிட் வழங்கி குமரி மண்ணில் மிக பெரிய சகாப்தம் செய்துள்ளது இரத்த தான நன்கொடையாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் குமரி அறக்கட்டளை சார்பாக இருகரம் கூப்பி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் மேலும் இரத்தத்திற்கு மட்டுமே ஜாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடோ பிரிவினையோ கிடையாது ஒற்றுமையாய் வாழ்வோம்! உயிர்களை காப்போம்
KUMARI ARAKKATTALAI 4TH ANNIVERSARY CELEBRATION 5TH ANNIVERSARY INAUGURAL CELEBRATION 28/05/2023 (Sunday) Welfare Scheme Granted

இயன்றதை செய்வோம் இயலாதவர்கே குமரி அறக்கட்டளையின் 4-வது ஆண்டு நிறைவு விழாவும் 5-வது ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு 28/05/2023 ( ஞாயிற்றுகிழமை) அன்று மாலை 3 மணி அளவில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் வைத்து 110-ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு பள்ளிச்சீருடை, Bag ,நோட்புக் ,எழுதுபொருட்கள் மற்றும் குடை வழங்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து 110-ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரிசி, சேலை வழங்கப்பட்டது. .மற்றும் சமூக சேவை செய்துகொண்டிருக்கின்ற அறக்கட்டளைகள் மற்றும் நற்பணி மன்றங்களை பாராட்டி விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
Kumari Foundation achieves 4000 units free blood donation on 11/03/2023

11/03/2023 அன்று குமரி அறக்கட்டளை 4000 யூனிட் இலவச இரத்த தான சாதனை
On 18/12/2022 Kumari Trust Blood Donation Awareness Mini Marathon was held at Karungal market ground on Sunday evening at 3 pm.

18/12/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மண அளவில் கருங்கல் சந்தை மைதானத்தில் குமரி அறக்கட்டளையின் விழிப்புணர்வு இரத்த தான மினி மாரத்தான் திக்கணம்கோடு சந்திப்பிலிருந்து துவங்கி கருங்கல் சந்தை மைதானத்தில் நிறைவுற்றது. அதனை தொடர்ந்து சுமார் 300 ஏழை குடும்பங்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்ட
On 29/11/2022 Union Ministry of Corporate Affairs approved CSR FORM -1.

29/11/2022 அன்று மத்திய பெருநிறுவன அமைச்சக அங்கீகாரம் பெறப்பட்டது CSR FORM -1.
Honouring Time

மரியாதை நேரம்
On 12/11/2022 Kumari Foundation Donated 3500 Units of Blood and made a record.

12/11/2022 அன்று 3500 யூனிட் இரத்தத்தை குமரி அறக்கட்டளை தானமாக செய்து சாதனை படைத்துள்ளது
Blood Donation and Organ Donation Awareness on Friday 15/10/22 Arasamudu Kulasekaram

15/10/22 வெள்ளிகிழமை அன்று இரத்த தான மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வு அரசமூடு குலசேகரம்
On 18/08/2022 GVS Personal Service Foundation honored Kumari Foundation

18/08/2022 அன்று ஜி வி எஸ் தனிமனித சேவை அறக்கட்டளை குமரி அறக்கட்டளையை கெளரவித்த தருணம்
Kumari Arakkattalai Third Anniversary Celebration and Fourth Anniversary Celebration 26/06/2022 Charity Giving Ceremony

அருமனை குஞ்சாலுவிளை சந்திப்பில் வைத்து 26/06/2022 அன்று குமரி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 130 ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மற்றும் அதனை தொடர்ந்து 18 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை மற்றும் நோட் புத்தகம் பேக் ஆகியவை வழங்கப்பட்டது
ON 15/07/2022 FREE BLOOD DONATION 3000 UNITS COMPLETED

15/07/2022 அன்று இலவச இரத்த தானம் 3000 யூனிட் பூர்த்தி செய்
2nd Year Anniversary

2ம் ஆண்டு நிறைவு விழா
Computerized on 29/06/2021. day

29/06/2021 அன்று கணினி மயமாக்கப்பட்ட. நாள்
Blood Donors and Social Worker Award on behalf of Kumari Foundation on 15/12/2019

15/12/2019 அன்று குமரி அறக்கட்டளை சார்பாக இரத்த தான நன்கொடையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர் விருது
Early Stage of Kumari Trust Kumari Blood Donation Group's First Service Disbursement Chittaralaya Seva Trust.

குமரி அறக்கட்டளையின் ஆரம்ப நிலை குமரி இரத்த தான குழுவின் முதல் சேவை சிதறால் சித்தரலையா சேவா டிரஸ்ட.
23/09/2019 Helmet Awareness Vehicle Campaign from Kulasekaram to Attoor Maria College

23/09/2019 ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் குலசேகரம் முதல் ஆற்றூர் மரியா காலேஜ் வரை நடைபெற்றத
Kumari Foundation Inaugural Kumari Blood Donation Group Blood Donation Camp on 14/06/2019

14/06/2019 அன்று குமரி அறக்கட்டளை ஆரம்பநிலையான குமரி இரத்த தான குழு இரத்த தான முகாம்
Back To Top Back To Top